பவானி அருகே காவிரி ஆற்றில் மிதந்து வந்த ஆண் சடலத்தை மீட்பது தொடர்பாக போலீசாருக்கு இடையே எல்லை தகராறு ஏற்பட்டது. கேசரிமங்கலம் காவிரி ஆற்றில் சுமார் 50 வயது மதிக்கதக்க ஆண் சடலம் மிதந்து வருவதாக பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார், சடலம் இருப்பது சேலம், தேவூர் காவல் நிலைய எல்லை பகுதி என தெரிவித்தனர். தேவூர் போலீசாரோ சடலம் இருக்கும் பகுதி ஈரோடு மாவட்ட எல்லை பகுதி என கூறி சடலத்தை எடுக்க மறுத்து விட்டனர். சடலம் சுமார் 6 மணிநேரம் மீட்கப்படாமல் நீரில் மிதந்தபடி கூத்தம்பூண்டி பகுதியை வந்தடைந்தது. பின்னர் பவானி போலீசார் சடலத்தை மீட்டனர்.