தமிழ்நாடு

வங்கி மேலாளர் உயிரிழந்த விவகாரம்... மருத்துவ கல்வி இயக்குநருக்கு நோட்டீஸ்

நாகப்பட்டினத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த தனியார் வங்கி மேலாளர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குநர் அறிக்கை அளிக்க தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

வங்கி மேலாளர் உயிரிழந்த விவகாரம்... மருத்துவ கல்வி இயக்குநருக்கு நோட்டீஸ்

நாகப்பட்டினத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த தனியார் வங்கி மேலாளர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குநர் அறிக்கை அளிக்க தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கொரோனா தொற்று காரணமாக நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனியார் வங்கி மேலாளர் ராஜேஷ், கடந்த 23ஆம் தேதி, திடீரென உயிரிழந்தார். மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாயில் கசிவு ஏற்பட்டதால் நோயாளிகள் பிற வார்டுகளுக்கு மாற்றப்பட்டதாகவும், அப்போது ஆக்சிஜன் சப்ளையை நிறுத்தியதால் தான் தனது கணவர் உயிரிழந்ததாகவும் ராஜேஷின் மனைவி சுபா குற்றம் சாட்டினார். இது தொடர்பாக தினத்தந்தி நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்து கொண்ட மனித உரிமை ஆணையம், 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய, மருத்துவ கல்வி இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"