ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன், பாளையங்கோட்டையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் கடந்த 2012-ல் கிளை மேலாளராக இருந்த போது பலர் கடன் வாங்கி ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக நடந்த விசாரணையில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் அம்மமுத்து உள்ளிட்ட 10 பேர் தவறு செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இவர்கள் மீது மதுரை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. வங்கி மேலாளர் உள்ளிட்ட 2 பேருக்கு 7 ஆண்டு சிறையும், 2 லட்சம் ரூபாயும் அபராதமும் விதித்த நீதிபதி, முன்னாள் அமைச்சர் அம்மமுத்து உள்ளிட்ட6 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டடை வழங்கி தீர்ப்பளித்தார்.