தமிழ்நாடு

அய்யனார் கோயிலில் கை வைத்த கொள்ளையர்களுக்கு நேர்ந்த கதி

தந்தி டிவி

ராமநாதபுரம் அருகே கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட 6 கிலோ வெள்ளி கவசங்கள் மற்றும் ரூபாய் 4 லட்சம் உண்டியல் பணம் மீட்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை அருகே உள்ள ஆலங்குளத்தில் பழமையான அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 30 ஆம் தேதி இரவு புகுந்த மர்ம நபர்கள் பீரோ மற்றும் உண்டியலை உடைத்து சுமார் 4 லட்சம் பணம் மற்றும் சுவாமிக்கு சாத்தக்கூடிய பல லட்சம் மதிப்பிலான வெள்ளி கவசங்களை திருடி சென்றனர். பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த திருட்டு தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை போலீசார் தேடி வந்தனர். விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த பார்த்திபன் மற்றும் திருச்சி அருகே உள்ள லால்குடியை சேர்ந்த செல்வகுமார் மற்றும் சரவணன் ஆகிய மூன்று பேர் சேர்ந்து பணம், வெள்ளி பொருட்களை திருடியது தெரியவந்தது. 3 பேரையும் கைது செய்த போலீசார் கொள்ளையடிக்கப்பட்ட ரூபாய் 4 லட்சம் பணம் மற்றும் வெள்ளி கவசங்களை மீட்டனர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட எஸ்பி சந்தீஷ் வெகுவாக பாராட்டினார்.

NTK Seeman Support | ``ஆதரவு’’ - அரசியல் களத்தை புரட்டிப்போட்ட சீமான்

CPM Shanmugam ``இது துரோகம்.. இந்த தேர்தலில் தவெக வேட்பாளர்களுக்கு ஓட்டு போடக்கூடாது?’’

Byelection | 4 கட்சியையும் எதிர்த்து `கம்யூ.,’ நிறுத்திய வேட்பாளர்கள்.. அவர்களின் `மாஸ் பின்னணி’

Protest | புதிய தலைமை செயலகத்தை எதிர்த்து ஒன்றிணைந்த 9 மீனவ கிராமம்

BREAKING || தாராபுரம் இடைத்தேர்தல்...இவ்வளவு பேர் போட்டியா?-இன்று ஒரே நாளில் குவிந்த வேட்பு மனுக்கள்