ராமேஸ்வரத்தில் காந்தி ஜெயந்தியை ஒட்டி, தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படும் விதமாக, கடற்கரையில் குவிந்திருந்த குப்பைகளை மாவட்ட ஆட்சியர் வெறும் கையால் சுத்தம் செய்தார். ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பாக, "தூய்மையே சேவை" விழிப்புணர்வு நிகழ்ச்சி ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடற்கரையில் நடைபெற்றது. இதை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், அங்கிருந்த குப்பைகளை வெறும் கையால் எடுத்து சுத்தம் செய்தார்.