தமிழ்நாடு

ஆவடியில் வயதான தம்பதிகள் கொல்லப்பட்ட சம்பவம்: ஆந்திராவில் உள்ள உறவினர்களிடம் தீவிர விசாரணை

ஆவடியில் வயதான தம்பதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி மீது ஆந்திர மாநிலத்தில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தந்தி டிவி

சென்னை ஆவடியை சேர்ந்த ஜெகதீசன் மற்றும் அவரது மனைவி விலாசினி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அவர்கள் வீட்டில் வேலை பார்த்து வந்த சுரேஷ் மாயமானார். இந்த நிலையில் சுரேஷை தேடி அவரது சொந்த ஊரான விசாகப்பட்டினத்திற்கு சென்ற போலீசார் அங்கு அவர் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். அவரைப் பற்றி அங்கு விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுரேஷ் அந்த பகுதியில் பிரபல கொள்ளையன் என்பதும், ஒரு பாலியல் வழக்கு மற்றும் 22 கொள்ளை வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. மேலும் விசாரணையின் போது ஆந்திர போலீசாரை தாக்கியதாகவும் இவர் மீது ஒரு வழக்கு உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரது உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Senthilbalaji Case | செ.பாலாஜிக்கு சாதகமாக வந்த உச்சநீதிமன்ற உத்தரவு

TVK MLA Trade Issue | உச்ச நீதிமன்றம் சென்ற தமிழக அரசுக்கு காத்திருந்த அதிர்ச்சி

MK Stalin | ``நான் ஜெயித்ததாக அறிவிக்க வேண்டும்’’ - சிக்கிய பாயிண்ட்.. அதிர்ச்சி கொடுத்த ஸ்டாலின்

Minister Vanni Arasu | "உள்நோக்கம் கொண்டு அரசியல்" - கோவி.செழியனுக்கு அமைச்சர் வன்னிஅரசு பதில்

Senthil Balaji Tasmac Case | டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்