திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில் ஏப்.2 தீர்ப்பு முன்னாள் அமைச்சரும், திமுக எம்.எல்.ஏ. பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், ஏப்ரல் 2-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் அறிவித்துள்ளது. 2006 முதல் 2011 வரை செம்மண் குவாரியில் அனுமதியை மீறி மண் எடுத்ததில் அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறி, பொன்முடி மற்றும் அவரது மகன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மொத்த 57 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டு, 33 பேர் அரசு தரப்புக்கு எதிராக சாட்சியம் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில், நீதிபதி மணிமொழி அடுத்த மாதம் 2-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுமென அறிவித்தார். சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.