தமிழ்நாடு

ஜெயிலர் படம் பார்க்கும்போது தகராறு.. விரக்தியில் பஸ்ஸை நிறுத்தி இளைஞர்கள் ரகளை

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே ஜெயிலர் திரைப்படம் பார்க்கும் போது ஏற்பட்ட தகராறால், பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடியை சேர்ந்த இளைஞர்கள் சிலர், அருகிலுள்ள கீரமங்கலத்தில் நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தை காணச் சென்றுள்ளனர். அப்போது, திரையரங்கினுள் கத்தி கூச்சலிட்டதை சிலர் கண்டித்ததால், தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், விரக்தியடைந்த இளைஞர்கள், அருகில் உள்ள பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், இளைஞர்களுக்கும், பொதுமக்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு தரப்பினருடமும் பேச்சுவார்த்தை நடத்தி, இளைஞர்களை எச்சரித்த நிலையில், அனைவரும் கலைந்து சென்றனர்.

BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் ஈரான் போர் - டிரம்ப் புது அறிவிப்பு

BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

BREAKING || உறுதியான சீட் - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

Breaking | DMK | Congress | திமுக-காங்., கூட்டணி - நெருங்கிய Climax

Breaking | Chennai | Suburban Train | சென்னை மக்களுக்கு குட் நியூஸ் நனவாகும் பல ஆண்டு கனவு