அரபு உடை அணிந்து, கையில் வாளுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திடீரென வந்த நபர் அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தார். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கு அரபு நாடுகளில் குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் தண்டனையை இந்திய நாட்டிலும் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆட்சியரிடம் அவர் மனு அளித்தார்.