தமிழ்நாடு

AR Rahman | Johny Master | ஜானி மாஸ்டர் வெளியிட்ட போட்டோ - வில்லங்கத்தில் சிக்கிய AR ரஹ்மான்

தந்தி டிவி

ஏ.ஆர்.ரகுமானுடன் ஜானி மாஸ்டர் எடுத்த புகைப்படத்தால் சர்ச்சை

பாலியல் வழக்கில் சிக்கிய நடன இயக்குநர் ஜானியுடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் புகைப்படம் எடுத்துக் கொண்ட நிலையில், இதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.துணை நடனக் கலைஞர் அளித்த பாலியல் புகார் காரணமாக, சிறை சென்ற ஜானி மாஸ்டர், ஜாமினில் வெளிவந்தார்.கடந்த சில மாதங்களாக மீண்டும் அவர் படங்களில் பணியாற்ற தொடங்கியுள்ள நிலையில், பாலியல் வழக்கில் சிக்கிய ஜானியை திரைத்துறையினர் ஆதரிப்பதாக சமூக வலைதளங்களில் தொடர் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில், ராம் சரண் நடித்துள்ள பெட்டி (Peddi) படத்தில் ஜானி நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். இந்தப் படத்திற்கு ரகுமான் இசையமைத்துள்ள நிலையில், முதல் பாடல் சமீபத்தில் வெளியானது.இப்படியான நிலையில் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஜானி.'உங்கள் ஆதரவான வார்த்தைகளுக்கு நன்றி' என ஜானி குறிப்பிட்டுள்ள நிலையில், ரகுமான் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது சர்ச்சையாகியுள்ளது.

Manickam Tagore | Congress | மாணிக்கம் தாகூர் ராஜினாமா.. காங்.,ல் உச்சகட்ட பரபரப்பு

High Court | ECI | Election | "வாக்காளர்களுக்கு பணம்.." ஹைகோர்ட் போட்ட உத்தரவு

Breaking | Madurai Highcourt | "சட்டவிரோதமானது.." | ஹைகோர்ட் மதுரை அமர்வு பரபரப்பு உத்தரவு

TVK Vijay Letter | தவெக கடிதத்தால் குழப்பம்.. பரபரப்பை கிளப்பிய விவகாரம்

Andhra Capital | ஆந்திர தலைநகர் மசோதா - ஜெகன்மோகன் கட்சி முடிவால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு