தமிழ்நாடு

"அண்ணா பல்கலை துணைவேந்தர் சர்வாதிகாரி போல செயல்பட முடியாது" - அமைச்சர் அன்பழகன்

அண்ணா பல்கலை துணைவேந்தர் சர்வாதிகாரி போல் செயல்பட முடியாது என உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

தந்தி டிவி

அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா சர்வாதிகாரி போல் செயல்பட முடியாது என்றும், அவர் தவறு செய்தால் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"முறைகேட்டில் ஈடுபட்டால் டிஸ்மிஸ்" - உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் சர்மா அதிரடி

முறைகேட்டில் ஈடுபட்டால் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்று உயர்கல்வித் துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு புகாரில் சிக்கியுள்ள அனைத்து அதிகாரிகளும் விரைவில் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்றும் முறைகேடு புகாரில் சிக்கும் அதிகாரிகள் மீது இனிமேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். மேலும், விடைத்தாள் முறைகேடு புகாரில் சிக்கியுள்ள முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உமா உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக ஏற்கனவே ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்