தமிழ்நாடு

ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணத்தை திருப்பிகொடுக்க உத்தரவிட்டால்தவறான முன்னுதாரணமாகி விடும் - அண்ணா பல்கலை

ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்த கோரி, அண்ணா பல்கலைக்கழகத்தின் உத்தரவுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.

தந்தி டிவி

ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்த கோரி, அண்ணா பல்கலைக்கழகத்தின் உத்தரவுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.

கொரோனா ஊரடங்கு காரணமாக இறுதி பருவத் தேர்வு தவிர பிற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கான கட்டணங்களை செலுத்தும்படி, அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து மாணவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

(gfx in1 )

இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அண்ணா பல்கலைக்கழகம் தரப்பு வழக்கறிஞர், விடைத்தாள் திருத்தப் பணி தவிர, மற்ற பணிகளுக்கான செலவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நியாயமான கட்டணமே வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.

கட்டணத்தை திருப்பி கொடுக்க உத்தரவிட்டால், அது தவறான முன்னுதாரணமாகி விடும் என்றும் அவர் தெரிவித்தார்.

வழக்கு தொடர்ந்துள்ள மாணவர்களின் பின்னணியில் கல்லூரிகள் உள்ளதாகவும், கல்லூரிகள், தங்களை வளப்படுத்திக் கொள்வதாகவும் அண்ணா பல்கலைக்கழக வழக்கறிஞர், புகார் தெரிவித்தார்.

விடைத்தாள் திருத்தப் பணி உள்ளிட்ட தேர்வுக்கு பிந்தைய செலவுகளுக்காக வசூலிக்கப்பட்ட கட்டணங்கள், பல்கலைக்கழக நலனுக்கு பயன்படுத்தப்படும் என்றார்.

இதையடுத்து, இந்த வழக்குகளின் தீர்ப்பை, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

Police Arrest | சென்னையில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்.. அத்துமீறிய காவலர் கைது

Aviation Fuel Price | விமான எரிபொருள் விலை உயர்வு - மத்திய அரசு உத்தரவு

வியக்க வைத்த GST வசூல் - ஏப்ரல் மட்டும் இத்தனை கோடிகளா!

Cocaine | Mumbai | மும்பையில் இப்படி ஒரு சம்பவமா! - சிக்கியது சர்வதேச போதைப்பொருள் கும்பல்

🔴LIVE : TVK Vijay | விஜய் நாளை செல்லும் கோயில்.. எதிர்பாரா சர்ப்ரைஸ்