தமிழ்நாடு

Minister Jagadeeswari | அன்பு இல்லம் 4வது கிளை தொடக்க விழா - அமைச்சர் ஜெகதீஸ்வரி பங்கேற்பு

அன்பு இல்லம் 4வது கிளை தொடக்க விழா - அமைச்சர் ஜெகதீஸ்வரி பங்கேற்பு

thanthitv

Minister Jagadeeswari | அன்பு இல்லம் 4வது கிளை தொடக்க விழா - அமைச்சர் ஜெகதீஸ்வரி பங்கேற்பு

#MinisterJagadeeswari #Virudhunagar #TVK #TNPolitics

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அன்பு இல்லத்தின் 4-வது கிளை தொடக்க விழாவில் பங்கேற்ற, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி மலையாளத்தில் பேசி கவனம் ஈர்த்தார். முடங்கியார் சாலையில், அரவிந்த் ஆசிரமத்தின் பின்புறம் அமைந்துள்ள இந்த அன்பு இல்லத்தில், உணவு தயாரிக்கும் அறையை ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார். தொடர்ந்து சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கான உணவுகள் தயாரிக்கப்படுவதை அமைச்சர் ஜெகதீஸ்வரி பார்வையிட்டார். பின்னர், உணவுகளைப் பொட்டலங்களாகக் கட்டி வாகனத்தில் ஏற்றியதைத் தொடர்ந்து, அந்த வாகனத்தைக் கொடியசைத்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸரி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, அன்பு இல்லம் போன்ற முதியோர் இல்லங்களும், ஆதரவற்றோர் இல்லங்களும் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதே தமிழக வெற்றிக் கழக அரசின் நோக்கம் எனத் தெரிவித்தார். இந்த உயரிய நோக்கத்தை நிறைவேற்ற பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஜெகதீஸ்வரி கேட்டுக்கொண்டார். மேலும், பொதுமக்கள் இதுபோன்ற நல்ல மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் ஜெகதீஸ்வரி வலியுறுத்தினார்.

Sivagangai Rowdy Murder | ரவுடி சுள்ளான் மதனை ஓட ஓட வெ*டி கொ*ற சம்பவம் - தட்டி தூக்கிய போலீஸ்

Dhanush’s Political Party? | தனுஷின் அரசியல் கட்சி? - இன்று காலை டெல்லி பயணம் - அதிரும் அரசியல் களம்

CM Vijay | Sewage Cleaners | `இனி மனிதர்கள் இறங்க தேவையில்லை..' - CM விஜய் அதிரடி உத்தரவு

Chennai Rain Alert மீண்டும் Red Alert சூழல்? போனமுறை போல் இல்லாமல் `U Trun’ போட்டு வரும் சுழற்சி

Marina Beach| மெரினாவில்.. அதிரடி அறிவிப்பு