தமிழ்நாடு

Anbil Mahesh Arrest Update | ஸ்பெஷல் கோர்ட்டில் ஜாமின் கேட்ட அன்பில் - பறந்த அதிரடி உத்தரவு

ஸ்பெஷல் கோர்ட்டில் ஜாமின் கேட்ட அன்பில் - பறந்த அதிரடி உத்தரவு

thanthitv

#anbilmahesh #anbilmahesharrest

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்கும்படி சென்னை சிறப்பு நீதிமன்றம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்க நூறு கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், கைதாகியுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார் விசாரணையில் அன்பில் மகேஷை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும், ஜாமின் மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வேண்டும் எனவும் காவல்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதேவேளையில், அன்பில் தரப்பில் தனது வீட்டில் சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு சாதனங்களை திரும்ப ஒப்படைக்கக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும், அந்த மனுவையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி, அன்பில் மகேஷின் ஜாமீன் மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வருகிற நவம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தார்

CM Vijay Plan | அடடே அப்படியா? சர்ப்ரைஸாக வெளியான தகவல்

Minister Nirmalkumar | "வேண்டுமென்றே செய்றாங்க.. " - அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு விளக்கம்

DVAC | KN Nehru | "குற்றத்தை நிரூபிக்கும் 170 ஆவணங்கள் பறிமுதல்" - லஞ்ச ஒழிப்புத்துறை

Jason Sanjay | "இல்லவே இல்லை.." - ஜேசன் சஞ்சய் பரபரப்பு அறிக்கை

Breaking | Chennai | Crime | பிறந்து சில நிமிடங்களிலேயே குழந்தையை கொடூரமாக கொ*ன்ற 18 வயது பெண்