தமிழ்நாடு

கோயில் கதவை பூட்ட மறந்த பூசாரி.. வீட்டுக்கு பறந்த நோட்டீஸ்

தந்தி டிவி

திருப்பத்தூர் அருகே கோவில் கதவை பூட்ட மறந்த பூசாரிக்கு, அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றி வரும் கண்ணன் என்பவர், கடந்த சனிக்கிழமை இரவு பூஜையை முடித்துவிட்டு சென்றுள்ளார். இரவு நீண்ட நேரம் ஆகியும் கோவில் கதவுகள் திறந்தே இருந்ததால் கோவிலுக்குள் திருடர்கள் நுழைந்திருக்கலாம் என எண்ணிய அப்பகுதி மக்கள், உடனடியாக கோவிலுக்குள் நுழைந்து தேடிப் பார்த்துள்ளனர். அப்போது, அங்கு யாரும் இல்லாததால் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு மேற்கொண்ட போது,

அர்ச்சகர் கவன குறைவால் கோவிலை பூட்டாமல் வெளியேறியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாகிகளை அழைத்து போலீசார் கோவிலுக்கு பூட்டு போட்டனர். இதனிடையே,கோவிலை பூட்டாமல் சென்ற அர்ச்சகர் கண்ணனுக்கு, அறநிலையத்துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

Today Gold Rate | மாறியது தங்கத்தின் நிலவரம்

Iranwar ``ஒன்னுமே மிஞ்சாது பாக்குறீங்களா.. காட்டவா’’ - ஈரானுக்கு எதிராக அதிஉச்ச முடிவெடுத்த டிரம்ப்

TN New Governor | விடைபெறும் ஆளுநர் ஆர்.என்.ரவி.. பொறுப்பேற்கும் புதிய ஆளுநர் ஆா்.வி.ஆா்லேகா்

Guduvanchery Family | கொசுவர்த்தியால் விபரீதம் - கணவன், மனைவி, குழந்தை மூவரும் கோர பலி

Breaking | Karur Stampede | Senthil Balaji | "செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை.." | பரபரப்பை கிளப்பிய CBI