அவனியாபுரம், பாலமேட்டை அடுத்து உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளும், 800 வீரர்களும் பங்கேற்க உள்ளனர். வெற்றி பெறும் வீரர்களுக்கான கார், இருசக்கர வாகனம் உள்ளிட்ட பரிசுகளும் தயாராக உள்ளது. போட்டிக்கு முன்பாக மீண்டும் ஒருமுறை மாடுகளுக்கும், வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெறும்.