தமிழ்நாடு

யானைகவுனி பகுதியில் 300 சிசிடிவி கேமரா - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்

சென்னை - யானைகவுனி காவல் நிலைய எல்லை பகுதியில் பொருத்தப்பட்டுள்ள 300 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி

சென்னை - யானைகவுனி காவல் நிலைய எல்லை பகுதியில் பொருத்தப்பட்டுள்ள 300 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். இதன் மூலம் யானைகவுனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 100 சதவீதம் இடங்கள் சிசிடிவி கேமராக்களின் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆணையர் தினகரன், இணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, துணை ஆணையர் பிரபாகரன் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் பேசிய ஆணையர் விஸ்வநாதன், வடக்கு மண்டலத்தில 30 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும்,

சென்னை பெருநகரத்துக்கே பெரும் எடுத்து காட்டாக விளங்குவதாகவும் கூறினார். மக்களின் பாதுகாப்புக்காக அல்லும் பகலும், போலீசார் உழைத்து வருவதாக தெரிவித்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி