டெல்லியில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் எம்.பி.குழந்தைவேலுவின் மகனை போலீசார் சென்னை அழைத்து வந்தனர். திருச்செங்கோடு முன்னாள் எம்பி குழந்தைவேலுவின் மனைவி ரத்தினம் சென்னை சாஸ்திரி நகரில் வசித்து வந்தார். இந்நிலையில், திருமணம் விவகாரம் மற்றும் சொத்து தகராறு காரணமாக அவரது மகன் பிரவீன் கடந்த ஏப்ரல் மாதம் ரத்தினத்தை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் டெல்லி ஹோட்டலில் பதுங்கி இருந்த பிரவீனை கைது செய்த தமிழக போலீசார், விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தனர்.