தமிழ்நாடு

பக்தி கூட்டமாக மாறிய அதிமுக பொதுக்கூட்டம்

அதிமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் முன்னிலையில் பக்தி பாடலுக்கு பெண்கள் சாமி ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

அதிமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் முன்னிலையில் பக்தி பாடலுக்கு பெண்கள் சாமி ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த பையூர் கிராமத்தில், அறநிலைய துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் முன்னிலையில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அதிமுக பேச்சாளர் விழுப்புரம் செல்வராஜ் பேசியபோது, திடீரென அம்மன் பாடலை பாடினார். இதையடுத்து, கூட்டத்தில் இருந்த பெண்களில் சிலர், அம்மன் பாடலுக்கு ஏற்ப சாமியாடியதால், அதிமுக பொதுகூட்டம் பக்தி கூட்டமாக மாறியது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்