தமிழ்நாடு

வெடித்து சிதறிய ஏசி - பெட்ரோல் பங்கில் 3 பேருக்கு நேர்ந்த கதி

தந்தி டிவி

AC Blast | வெடித்து சிதறிய ஏசி - பெட்ரோல் பங்கில் 3 பேருக்கு நேர்ந்த கதி

பெட்ரோல் பங்கில் ஏசி கம்ப்ரசர் வெடித்ததில் 3 பேர் படுகாயம்

பல்லாவரம் அருகே அனகாபுத்தூரில் உள்ள பெட்ரோல் பங்கில், திடீரென பயங்கர சத்தத்துடன் ஏசி கம்ப்ரசர் வெடித்ததில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். அனகாபுத்தூர் பேருந்து நிலையம் அருகே புதியதாக திறக்கப்பட்ட தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில், ஏசி பொருத்தும் பணி நடைபெற்றது. அப்போது எதிபாராதவிதமாக ஏசி கம்ப்ரசர் இயந்திரம் வெடித்ததில், ஏசி பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த சபீர், முகிர்தீன், சபிருல்லா ஆகிய மூவரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து பங்க் ஊழியர்கள் உடனடியாக அவர்களை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Protest | Students | "மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்க கூடாது" - வாபஸ் பெறப்பட்ட உத்தரவு

CM Vijay TN Assembly | "அடக்கம்.." - குறளால் பேசிய எம்.எல்.ஏ. - உடனே CM விஜய் கொடுத்த ரியாக்‌ஷன்

DMK | MLA Nehru | "ஒரு வார்த்தைய போட்டா.. ஒரு வார்த்தைய வாங்குறீங்க.."

CM Vijay TN Assembly | "அடக்கம்.." - குறளால் பேசிய அமைச்சர் - உடனே CM விஜய் கொடுத்த ரியாக்‌ஷன்

Minister Aadhav TN Assembly Speech | "அப்போ தெரியும்.." - அரங்கை அதிரவிட்ட அமைச்சர் ஆதவ்