தமிழ்நாடு

விலை உயரும் ஆவின் பால் பொருட்கள்...

ஆவின் பால் விலை உயர்வை தொடர்ந்து, தற்போது ஆவின் பால் பொருட்களின் விலையும் உயர்த்தப்படுகிறது.

தந்தி டிவி

ஆவின் பால் விலை உயர்வை தொடர்ந்து, தற்போது ஆவின் பால் பொருட்களின் விலையும் உயர்த்தப்படுகிறது. வரும் புதன்கிழமை முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரவுள்ளது. ஒரு லிட்டர் 460 ரூபாயாக இருந்த நெய், தற்போது 30 ரூபாய் விலை உயர்த்தப்பட்டு 495 ரூபாயாக விற்பனை செய்யப்படும். பால் பவுடர் ஒரு கிலோ 270 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 50 ரூபாய் விலை ஏற்றம் செய்யப்பட்டு 320 ரூபாய்க்கு விற்பனை ஆக உள்ளது. 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பனீர், தற்போது 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் 450 ரூபாய்க்கு விற்பனையாகும். ஆவின் வெண்ணெய் அரை கிலோ 230 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது 10 ரூபாய் உயர்த்தப்பட்டு 240 ரூபாயாக விற்பனை செய்யப்படும்.

ஆவின் பால்கோவா ஒரு கிலோ 500 ரூபாயிலிருந்து 20 ரூபாய் உயர்த்தப்பட்டு 520 ரூபாயாக விற்பனை செய்யப்பட உள்ளது. ஆவின் டிலைட் பால் அரை லிட்டர் 26 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 4 ரூபாய் உயர்த்தப்பட்டு 30 ரூபாயாக விற்பனையாக உள்ளது. 22 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட அரை லிட்டர் நறுமண பால் 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால், இனிமேல் 25 ரூபாய்க்கு விற்பனையாகும். அரை லிட்டர் தயிர் 25 ரூபாயில் இருந்து 2 ரூபாய் உயர்த்தப்பட்டு 27 ரூபாயாக விற்பனை செய்யப்பட உள்ளது.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்