தமிழ்நாடு

பூட்டிய வீட்டிற்குள் இருந்த இளம் ரவுடி...முகத்தை சிதைத்து கொடூர கொலை

தந்தி டிவி

என் மகனை அடையாளம் தெரியாத மாதிரி கொன்னுட்டாங்களே.. என்கிற அந்த தாயின் கதறல் சப்தம் அப்பகுதியினரின் உறக்கத்தை துளைத்திருந்தது.வேட்டை நாய்களிடமிருந்து கோழிக்குஞ்சை காப்பாற்றுவது போல தான் அந்த தாயும் மகனை இந்த சிறிய வீட்டிற்குள் பொத்தி பொத்தி பாதுக்காத்திருக்கிறார். ஆனால், அவர் அருகிலுள்ள கடைக்கு சென்று வருவதற்குள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த மகனின் கதையை முடித்திருக்கிறது ஒரு கொலைவெறி கூட்டம்.அந்த சிறிய வீட்டின் தரை முழுவதும் ரத்தம் வழிந்தோடி இருந்தது காண்போரை அதிர வைத்தது.

சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்களை சேகரித்த போலீஸார் இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு விசாரணையை தொடங்கி உள்ளனர்.கொல்லப்பட்டவர் 19 வயதான ஆகாஷ், சென்னை திருவொற்றியூரிலுள்ள ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியை சேர்ந்தவர். 18 வயதை நிரம்பி ஒரு வருடம் கூட ஆகாத நிலையில், ஆகாஷ் மீது அடிதடி, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 17 வழக்குகள் நிலுவையில் இருந்துள்ளது. கடைசியாக அவர் ஒரு குற்றவழக்கில் ஈடுப்பட்டப்போது அவரை காவல்துறையினர் விரத்திச் சென்று பிடிக்க முயன்றிருக்கிறார்கள். அப்போது நடந்த சேஸிங்கில் வழுக்கி விழுந்த ஆகாஷிற்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் மாவுக்கட்டு போடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சென்ற மாதம் 22 ம் தேதி தான் ஆகாஷ் சிறையிலிருந்து பிணையில் வெளிவந்துள்ளார்.மகனின் உயிருக்கே அச்சுறுத்தல் இருப்பதாக விசயம் அறிந்தவர்கள் ஆகாஷின் தாய் ஜெயாவை எச்சரித்துள்ளனர். இதையடுத்து ஆகாஷை வீட்டிற்குள்ளயே பூட்டி வைத்து பாதுகாத்துள்ளார் ஜெயா. சம்பவம் நடந்தன்று ஜெயா மளிகை பொருட்களை வாங்குவதற்காக அருகிலிருந்த கடைக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென மழை பெய்ததால் ஜெயா வீடு திரும்ப தாமதமாகி உள்ளது. அந்த நேரத்தில் ஆகாஷின் செல்போன் நம்பரிலிருந்து ஜெயாவிற்கு ஒரு மிஸ்டு கால் வந்திருக்கிறது. ஜெயா மறுபடியும் மகனை தொடர்பு கொண்டப்போது எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து பதறியடித்து வீட்டிற்கு ஓடி வந்து பார்த்தப்போது தான் ஆகாஷ் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் மிக கொடூரமாக கொலைசெய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்.நடந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலீஸார், சந்தேகத்திற்குரிய ஐந்து நபர்களை பிடித்து அவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினரின் முழுமையான விசாரணைக்கு பிறகே நடந்த கொலைக்கு என்ன காரணம் ? கொலையாளிகள் யார் என்பது வெளிச்சத்திற்கு வரும்.

ADMK | EPS | திமுகவை இறங்கி அடிக்கும் EPS.. பேசப் பேச அதிரும் மயிலாப்பூர்

PMK | முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு அரசியல் களத்தை அதிர விட்ட பாமக

BREAKING || "விஜய்யை சட்ட மன்றத்துக்குள் அனுப்பவே இந்த முடிவு..." டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட் தகவல்

BREAKING ||சென்னையில் நேரடியாக களமிறங்கும் தொகுதி லிஸ்ட் - மோதிப்பார்க்க ரெடியான அதிமுக

🔴LIVE : TVK | Vijay | Election2026 | விஜய்க்கு கிடைத்த கிரீன் சிக்னல் - இறங்கி ஆட ரெடியாகும் தவெக