தமிழ்நாடு

ஆசை ஆசையாக அமேசானில் ஆர்டர் செய்த இளைஞருக்கு பேரதிர்ச்சி

தந்தி டிவி

ஆசை ஆசையாக அமேசான் தளத்தில் ட்ரோன் ஆர்டர் செய்த இளைஞருக்கு, வாட்டர் பாட்டில் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்த குகன் செல்போன் கடையில் பணியாற்றி வருகிறார். இவர் அமேசான் ஆஃபரில் குறைந்த விலையில் 800 ரூபாய்க்கு வானில் பறக்கும் ட்ரோனை ஆர்டர் செய்துள்ளார். மேலும் ஜீபே மூலம் பணத்தையும் செலுத்தி உள்ளார். ஆனால் டெலிவரி செய்யப்பட்ட பார்சலை பிரித்து பார்த்த குகன், அதில் பத்து ரூபாய் மதிப்புள்ள சிறிய வாட்டர் பாட்டில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து இது குறித்து ஆதாரத்துடன் அமேசான் தளத்தில் குகன் புகார் அளித்துள்ளார்.

Minister Keerthana | Nara Lokesh | சீக்ரெட்ஸ் சர்ச்சை..நாரா லோகேஷ் Vs Min. கீர்த்தனா வார்த்தைப்போர்

BREAKING || 22,000 பேரை ஏமாற்றிய வெறும் 22 பேர் - நாட்டையே கதிகலங்க விட்ட மெகா மோசடி

TN Politics | EPS | AIADMK | "தமிழகத்தில்.. இந்த ஆட்சி தானாகவே கவிழும்.." EPS பரபரப்பு பேட்டி

TNGovt | CM Vijay | FDI | "195 நாட்களில் ரூ.1.14 லட்சம் கோடிகள்.." மிரளவிட்ட தமிழக அரசு

Dindigul | மது போதையில் கூலித்தொழிலாளியை தாக்கிய தலைமை காவலர் சஸ்பெண்ட்