Poonamallee | Crackers | பட்டாசு வெடித்தபோது விபரீதம் - மொத்தமாக முடிந்தது.. #crackers #fire #fireaccident #Poonamallee #thanthitv தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீப்பொறி விழுந்து, பூந்தமல்லி அருகே அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாகின. காட்டுப்பாக்கம், கோபுரசநல்லூர் பகுதியில் சிறுவர்கள் பட்டாசு வெடித்தபோது, அதிலிருந்து பறந்த தீப்பொறிகள் தரைத்தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது விழுந்து தீப்பற்றியது. தகவலறிந்து வந்த பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மேலும், குடியிருப்பின் மேல் தளங்களுக்கும் தீ பரவியதில் அங்கிருந்த பொருட்களும் சேதமடைந்தன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.