தமிழ்நாடு

Nilgiris | Tiger | 10 நாட்களாக ஆட்டம் காட்டும் கொடூர புலி | 2 கும்கிகளுடன் இறங்கிய வனத்துறையினர்

10 நாட்களாக ஆட்டம் காட்டும் கொடூர புலி | 2 கும்கிகளுடன் இறங்கிய வனத்துறையினர்

thanthitv

Nilgiris | Tiger | 10 நாட்களாக ஆட்டம் காட்டும் கொடூர புலி | 2 கும்கிகளுடன் இறங்கி சல்லடை போடும் வனத்துறையினர்

கூடலூர் அருகே இருவரை கொன்ற புலி - 10வது நாளாக தொடரும் தேடுதல் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி லாரஸ்டன் பகுதியில் இருவரை தாக்கிக் கொன்ற புலியை பிடிக்க, வனத்துறையினர் 10-வது நாளாக தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க 136 இடங்களில் தானியங்கி கேமராக்களும், 13 இடங்களில் கூண்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை புலி சிக்கவில்லை. இந்நிலையில், இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட வன அலுவலர் தலைமையில் 4 கால்நடை மருத்துவர்கள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து தேடி வருகின்றனர். மேலும், 3 ட்ரோன் குழுக்களும் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றன. புலி நடமாட்டம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் தனியாக வெளியே செல்ல வேண்டாம் என்றும், புலி தென்பட்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Breaking | Tirupathur Incident | கிணற்றில் அழுகிய நிலையில் சடலமாக மிதந்த 2 சிறுவர்கள்

Kallakurichi | நகைக்காக கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட மூதாட்டி.. கள்ளக்குறிச்சியில் பேரதிர்ச்சி

Nepal Flash Flood Death Count Update | நேபாள பெருவெள்ளம்..பேரதிர்ச்சி தரும் பலி எண்ணிக்கை

Nepal Flood Latest Update | இந்தியாவுக்கு அதிர்ச்சி செய்தி சொன்ன சீன அரசு

Chennai Airport | TN Govt | கைவிடப்பட்ட பரந்தூர் ஏர்போர்ட் | மாஸ் பிளானோடு இறங்கிய தமிழக அரசு