பெண்ணை வாய்க்காலில் தள்ளி கொ*ல செய்து நாடகமாடிய கள்ளக்காதலன் - காரணத்தை கேட்டு ஆடிப்போன போலீஸ் #murder #police #arrest #thanthitv உடுமலை அருகே பெண்ணை வாய்க்காலில் தள்ளிக் கொலை செய்து நாடகமாடிய கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை ரத்தினபுரியைச் சேர்ந்தவர் கீதா. இவர் மெக்கானிக் கதிரவனுடன் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கீதாவின் நகைகளை கதிரவன் விற்றதாகக் கூறப்படுகிறது. இதனால் நகை, பணத்தைத் திருப்பிக் கேட்டு கீதா வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கதிரவன், கீதாவை திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் அருகே உள்ள பி.ஏ.பி. வாய்க்காலுக்கு அழைத்துச் சென்று, தண்ணீரில் தள்ளிக் கொலை செய்துள்ளார். பின்னர் கீதா தவறி விழுந்ததாகக் கூறி 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் விசாரணையில் கொலையை மறைத்து நாடகமாடியது அம்பலமானது. இதையடுத்து கதிரவனை குடிமங்கலம் போலீசார் கைது செய்துள்ளனர்.