அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பொன்னாற்று பாசனத்தில் கரைபுரண்டு வெள்ளம் ஓடியதால் 75 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
பொன்னாற்று பாசனவாய்க்காலை சரியாக தூர்வாராததே காரணம் எனவும், பாதிக்குள்ளான நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூபாய் 25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தா.பழூர் டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இதே நிலை நீடித்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்