#vilupuram | #police | #babygirl #missing
பிறந்த நாள் கொண்டாடி அன்று இரவே மாயமான 7 வயது சிறுமி... குவிக்கப்பட்ட போலீஸ்... ஊரே பதற்றத்தில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே, பிறந்தநாள் கொண்டாடிய 7 வயது சிறுமி வீட்டில் தூங்கியபோது நள்ளிரவில் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த வடிவேலுவின் மகள் ஹேமாவதிக்கு நேற்று பிறந்தநாள் கொண்டாடியதை தொடர்ந்து, இரவு பெற்றோருடன் வீட்டு மாடியில் தூங்கியுள்ளார். காலை எழுந்து பார்த்தபோது சிறுமியைக் காணாததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து, மோப்ப நாய், ட்ரோன் கேமராக்கள் மற்றும் கூடுதல் போலீசார் உதவியுடன் கிராமம் முழுவதும் தீவிர தேடுதல் நடைபெற்று வருகிறது. பல மணி நேர தேடுதலுக்குப் பின்னரும் சிறுமி குறித்த எந்தத் தடயமும் கிடைக்காததால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.