தமிழ்நாடு

7 IAS அதிகாரிகள் திடீர் மாற்றம் - தமிழக அரசு அதிரடி

தந்தி டிவி

தமிழகத்தில் மாநில தேர்தல் ஆணைய செயலர் உட்பட 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை செயலர் ரமேஷ் சந்த் மீனா ஓய்வு பெறுவதை அடுத்து, அப்பதவிக்கு, பொதுத்துறை சிறப்பு செயலராக உள்ள சஜ்ஜன் சிங் ரா.சவான் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலராக இருந்த கி.பாலசுப்பிரமணியம், பொதுத்துறை கூடுதல் செயலராகவும், உள்துறை கூடுதல் செயலர் ப.ஸ்ரீவெங்கட பிரியா, மாநில தேர்தல் ஆணைய செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக இருந்த பனோத் ம்ருகேந்தர் லால், கூட்டுறவு மற்றும் உணவுத்துறை துணை செயலராவும், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக எஸ்.பிரியங்காவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் (டிட்கோ) செயல் அலுவலராக ஸ்வேதா சுமனும், சமூக நல இயக்குனரக கூடுதல் இயக்குனராக ஷரண்யா ஹரியும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

Crime | Death | கும்மிடிப்பூண்டி குழந்தை பாலியல் வன்கொடுமை சம்பவம்.. வெளியான பகீர் தகவல்

Vijayabaskar | Vijay | TVK |ADMK|முதல்முறையாக மவுனம் கலைத்தார் விஜயபாஸ்கர் -CM விஜய் பிறந்தநாளில்..?

TN Govt | CM Vijay | Magalir Urimaithogai | "மாதம் ரூ2500.." CM விஜய் முக்கிய ஆலோசனை

Aakash Case|``உடலை இன்று வாங்கவில்லை என்றால்..''- பெற்றோருக்கு ஐகோர்ட் மதுரை பெஞ்ச் பரபரப்பு உத்தரவு

Ramanathapuram | ராமநாதபுரம் டிராக்டர் விபத்தில் பலியான தலைமை காவலரின் கண்கள் தானம்