தமிழ்நாடு

5வது நாளாக ஆளுநருக்கு எதிராக தர்ணா போராட்டம்

ஆளுநருக்கு எதிராக தர்ணா போராட்டம்

தந்தி டிவி

மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பான 39 கோப்புகளுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்கக்கோரி கடந்த புதன்கிழமை முதல் ஆளுநர் மாளிகை முன்பு முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் தொடர் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். கிரண்பேடி 5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள நிலையில் வரும் 21ஆம் தேதி கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் தங்களது கோரிக்கைகளை ஆளுநர் நிறைவேற்றும் வரை தர்ணாவில் ஈடுபடுவோம் என முதல்வர் தெரிவித்தார். இந்நிலையில் 5வது நாளாக போராட்டம் தொடர்கிறது. இதையடுத்து, முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் ஆளுநர் மாளிகை முன்பு தரையில் படுத்து தூங்கி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். மேலும் இன்று கருப்புக்கொடி ஏற்றி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

Gem Veeramani | Police | SIT | வீரமணி விவகாரம்.. பொதுமக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

Storm Warning | வந்தது புயல் எச்சரிக்கை.. 9 துறைமுகங்களில் கூண்டு ஏற்றம்

CM Vijay Madurai Visit | குழந்தையை கொடுக்க.. சட்டென்று பாய்ந்து வாங்கிய CM விஜய்

CM Vijay Madurai Visit | பிஞ்சி விரல்களை தேடித்தேடி மோதிரம் போட்ட CM விஜய்

CM Vijay | குழந்தைகளோடு அமர்ந்திருந்த தாய்மார்கள்.. மலர்ந்த முகம் மாறாமல் இருந்த CM விஜய்