மெகா சர்ப்ரைஸ் தந்த 2027 லீவ் லிஸ்ட் - பெரிய பெரிய லீவ்லாம் திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி தான் வருது
#2027leavelist #tngovt
2027-ம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களைத் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. 2027-ம் ஆண்டில் மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. புத்தாண்டின் முதல் நாளான ஜனவரி 1 வெள்ளிக்கிழமை தொடங்கும் விடுமுறைப் பட்டியலில், தமிழர்களின் முதன்மைத் திருவிழாவான பொங்கல் பண்டிகை ஜனவரி 15 வெள்ளிக்கிழமையன்றும், அதைத் தொடர்ந்து திருவள்ளுவர் நாள் ஜனவரி 16 சனிக்கிழமையன்றும் வருகின்றது. மேலும் உழவர் திருநாள் ஜனவரி 17 ஞாயிற்றுக்கிழமையும், தைப்பூசம் ஜனவரி 22 வெள்ளிக்கிழமையும், குடியரசு தினம் ஜனவரி 26 செவ்வாய்க்கிழமையும் விடுமுறை நாட்களாக உள்ளன. ரம்ஜான் மார்ச் 10 புதன்கிழமையன்றும், பக்ரீத் மே 17 திங்கட்கிழமையன்றும், மொகரம் ஜூன் 15 செவ்வாய்க்கிழமையன்றும் வருகின்றன. அதேபோலப் புனித வெள்ளி மார்ச் 26 வெள்ளிக்கிழமையன்றும், தமிழ் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் பிறந்த நாள் ஏப்ரல் 14 புதன்கிழமையன்றும் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. வணிக மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கான ஆண்டு கணக்கு முடிவு நாளான ஏப்ரல் 1ம் தேதி வியாழக்கிழமையும், அதைத் தொடர்ந்து ஏப்ரல் 7-ஆம் தேதி புதன்கிழமை தெலுங்கு வருடப் பிறப்பு தினத்திற்காகவும் விடுமுறை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து, ஏப்ரல் 19-ஆம் தேதி திங்கட்கிழமை மகாவீர் ஜெயந்தி நாளும், மே 1-ஆம் தேதி சனிக்கிழமை உலக தொழிலாளர் நாளான மே நாளும் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்வாண்டின் சிறப்பம்சமாகச் சுதந்திர தினமும் மிலாது நபியும் ஆகஸ்ட் 15 ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் வருகின்றன. இதனிடையே கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் 25 புதன்கிழமையும், விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 4 சனிக்கிழமையும், காந்தி ஜெயந்தி அக்டோபர் 2 சனிக்கிழமையும் வருகின்றன. பண்டிகைக் காலத்தின் முக்கிய விழாக்களான ஆயுத பூஜை அக்டோபர் 8 வெள்ளிக்கிழமையன்றும், விஜயதசமி அக்டோபர் 9 சனிக்கிழமையன்றும் வருகின்றன. தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 28 வியாழக்கிழமையன்றும், கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25 சனிக்கிழமையன்றும் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 2027ஆம் ஆண்டில் ஜனவரி 17 மற்றும் ஆகஸ்ட்15 ஆகிய 2 விடுமுறை நாட்கள் ஞாயிற்றுக்கிழமை வருகின்றன... ஜனவரி 16, மே 1, செப்டம்பர் 4, அக்டோபர் 2, அக்டோபர் 9, டிசம்பர் 25 ஆகிய 6 விடுமுறை நாட்கள் சனிக்கிழமையில் வருகிறது... பொது விடுமுறை குறித்த அரசாணை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது விடுமுறைத் திட்டமிடுதல்களைத் தொடங்கியுள்ளனர்.