டான்ஜெட்கோ இழப்பு ரூ.1.62 லட்சம் கோடியாக உயர்வு-CAG தணிக்கை அறிக்கை
தமிழக மின்வாரியமான டான்ஜெட்கோவிற்கு மார்ச் 2023 இறுதியில் மொத்த இழப்பு 1 லட்சத்து 62 ஆயிரத்து 507 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகத் தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தியில் மின்வாரியத்தின் பங்களிப்பு வெறும் 20.48 சதவீதம் மட்டுமே உள்ளது. சொந்த உற்பத்தி திறனை உயர்த்தாமல், அதிக விலைக்கு வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்ததே இந்த பெரும் இழப்பிற்குக் காரணம் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், நிலக்கரியை அதிக விலைக்குக் கொள்முதல் செய்ததால் 3 ஆயிரத்து 940 கோடி ரூபாயும், நிலையான விலை முறையிலிருந்து மாறும் விலை முறைக்கு மாறத் தவறியதால் ஆயிரத்து 244 கோடி ரூபாயும் கூடுதல் செலவாகியுள்ளதாகத் தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#tncagreport #tangedco #tneb #thanthitv