#saibabatemple #templedonation
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், கோயில் கட்டுவதற்காக 15 லட்சம் ரூபாய் நன்கொடை பெறும் ஆசையில், ஒரு கோடி ரூபாயை ரியல் எஸ்டேட் அதிபர் இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெருந்துறையைச் சேர்ந்த அருள்குமார், தனது நண்பர் சிவராஜுடன் இணைந்து சாய்பாபா கோயில் கட்டி வருகிறார். இதற்காக நிதி திரட்ட முயன்றபோது, ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் வங்கிக் கணக்கில் ஒரு கோடியே 15 லட்சம் ரூபாயாகத் திருப்பிச் செலுத்துவதாக சிலர் கூறியுள்ளனர். இதை நம்பி, கோயில் கட்டும் இடத்தில் ஒரு கோடி ரூபாயுடன் அருள்குமாரும் சிவராஜும் காத்திருந்தனர். அப்போது இரண்டு கார்களில் வந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், இருவரையும் தாக்கிவிட்டு பணத்தைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, ஆறு பேரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.