#srivilliputtur | #aandal ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 108 போர்வை சாற்றும் உற்சவம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கௌசிக ஏகாதசியை முன்னிட்டு 108 போர்வை சாற்றுதல் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி பகல்பத்து மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் உள்ளிட்ட தெய்வங்களுக்கும், ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர்களுக்கும் 108 போர்வைகள் சாற்றப்பட்டன. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், அரையர் வியாக்கியானம் மற்றும் கௌசிக புராணம் வாசிக்கும் நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.