U19 உலகக்கோப்பை - 10வது முறையாக இறுதி போட்டியில் இந்திய அணி
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி 10வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, வெள்ளியன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது.
ஜிம்பாப்வேயில் நடந்த அரையிறுதியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களுக்கு 4 விக்கெட்களை இழந்து 310 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 311 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 41.1 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எளிதில் வெற்றி பெற்றது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஆரோன் ஜார்ஜ் 115 ரன்கள் குவித்தார்.
கேப்டன் ஆயுஷ் மாத்ரே 62 ரன்களும், அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 33 பந்துகளில் 68 ரன்களும் குவித்ததால் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.