விளையாட்டு

டி.என்.பி.எல். கிரிக்கெட் லீக் சுற்று : மதுரை அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

டி.என்.பி.எல். லீக் சுற்றில் சேப்பாக் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மதுரை அணி வெற்றி பெற்றது

தந்தி டிவி

நத்தத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மதுரை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டன் சிஜித் சந்திரன், அருண் கார்த்திக் ஆகியோர் தலா 39 ரன்கள் எடுக்க, 20 ஓவர் முடிவில் மதுரை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் சசிதேவ் அதிகபட்சமாக 51 ரன்களும், கோபிநாத் 45 ரன்களும் எடுக்க, 20 ஓவர் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் மதுரை அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் : திண்டுக்கல் டிராகன்ஸ் 5வது வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த திருச்சி வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழந்து 178 ரன்கள் எடுத்தது,. திருச்சி வாரியர்ஸ் அணியில் அதிகபட்சமாக முரளி விஜய் 99 ரன்களும், கே.முகுந்த் 43 ரன்களும் சேர்த்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய திண்டுக்கல் அணி 5 பந்துகள் மீதம் வைத்து 179 ரன்கள் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. சதம் விளாசிய ஜெகதீசன் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்