ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் போது பெடரருக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். காயம் குணமடையாததால் அவர் மேலும் ஒர் அறுவை சிகிச்சை செய்ய நேரிட்டது. இதனால் அடுத்த ஆண்டில் தான் உங்களை சந்திப்பேன் என ரசிகர்களுக்கு பெடரர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.