விளையாட்டு

பீஸ் பீஸாக கிழித்த ஸ்டொய்னிஸ்.. ஏசு போல பொறுமை காத்த தோனி.. நொந்து நூடுல்ஸான CSK ஃபேன்ஸ்

தந்தி டிவி

சிஎஸ்கே அணியை, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் தொடரின் 39வது லீக் போட்டி நடைபெற்றது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் களமிறங்கின.

டாஸ் வென்ற லக்னோ அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து, களமிறங்கிய சிஎஸ்கே அணி, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 210 ரன்களை குவித்தது.

அதிகபட்சமாக, ருத்ராஜ் 108 ரன்களும், சிவம் துபே 66 ரன்களும் விளாசினர்.

தொடர்ந்து, 211 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய லக்னோ அணி, 19.3 ஓவர்களில் 213 ரன்களை குவித்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில், அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் 63 பந்துகளில் 124 ரன்களை குவித்தார்.

நடப்பு ஐபிஎல் போட்டியில், தனது முதல் சதத்தை விளாசிய அவருக்கு, ஆட்டநாயகன் விருதும், வழங்கப்பட்டது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு