ரஞ்சி கோப்பை காலிறுதி போட்டியில், கே.எல். ராகுலின் அபாரமான சதத்தால் கர்நாடகா அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. நடப்பு ரஞ்சி கோப்பை தொடரில், இது கே.எல். ராகுலின் முதல் சதம் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பைக்கு எதிராக நடந்த இந்த போட்டியில், 325 ரன்கள் என்ற இலக்கை நோக்கி கர்நாடகா தனது ஆட்டத்தை துவங்கியது. இதில் இந்திய நட்சத்திர வீரரும், கர்நாடக அணியை சேர்ந்த கே.எல்.ராகுல் 130 ரன்களும், அவருடன் இணைந்து ஸ்மரன் ரவிச்சந்திரன் 83 ரன்களை குவிக்க, கர்நாடகா அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். இதையடுத்து, 9வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில், புதிய உற்சாகத்துடன் வரும் 15ம் தேதி உத்தராகண்டுக்கு எதிராக கர்நாடகா அணி அரையிறுதியில் பங்கேற்க உள்ளது.