விளையாட்டு

ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக தங்க பதக்கம்.. சாதனை படைத்த ஜோகோவிச்!

தந்தி டிவி
• பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் டென்னிஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச் சாதனை படைத்துள்ளார். • ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற தங்கப் பதக்கத்திற்கானப் போட்டியில் செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச்சும், ஸ்பெயினைச் சேர்ந்த இளம் வீரர் அல்கராஸும் மோதினர். • போட்டி ஆரம்பித்தது முதல் இரு வீரர்களும் பரஸ்பரம் கடுமையாக சவால் அளித்து புள்ளிகளைப் பெற்றனர். • சுமார் 45 நிமிடம் நடைபெற்ற முதல் செட்டை,, டை-பிரேக்கரில் 7க்கு 6 என்ற கணக்கில் ஜோகோவிச் வென்றார். • 2வது செட்டிலும் இரு வீரர்களும் தீவிரமாகப் போராடியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. • பரபரப்பாக நடைபெற்ற 2வது செட்டை 7க்கு 6 என்ற கணக்கில் டை-பிரேக்கரில் கைப்பற்றிய ஜோகோவிச், நேர் செட்களில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார். • மேலும் ஒலிம்பிக் டென்னிஸ் தனிநபர் பிரிவில் அதிக வயதில் தங்கம் வென்ற வீரர் என 37 வயதாகும் ஜோகோவிச் சாதனை படைத்தார். • ஒலிம்பிக் ஆடவர் டென்னிஸ் இறுதிப்போட்டி முடிந்த பிறகு வெற்றிக் களிப்பில் ஜோகோவிச்சும், தோல்வி அடைந்த வேதனையில் அல்கராஸும் கண்ணீர் சிந்தினர்....

Sekarbabu | போலீசிடம் தகராறு? - ஸ்டேஷனில் சேகர்பாபு.. பரபரக்கும் தலைநகர்

CM Vijay | Devar Gurupoojai| தேவர் சிலைக்கு மாலை போட்ட சில நிமிடங்களில்.. CM சொன்ன வார்த்தைகள்

MK Stalin | DMK vs TVK | ``எச்சரிக்கை மணி’’ - மகளிரணியை இறக்கிவிட்ட ஸ்டாலின்

Thevar Jayanthi | பசும்பொன்னில் CPR, ஆளுநர் அர்லேகர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

CM Vijay | Thevar Jayanthi | பசும்பொன்னுக்கு மரியாதை செலுத்த வந்த CM விஜய் - திரண்டு நின்ற மக்கள்..