விளையாட்டு

MI | Rohit Sharma | மீண்டும் கேப்டனாகும் ஹிட் மேன்? - `MI' சூசகமாக வெளியிட்ட போஸ்டர்..

MI | Rohit Sharma | மீண்டும் கேப்டனாகும் ஹிட் மேன்? - `MI' சூசகமாக வெளியிட்ட போஸ்டர்..

thanthitv

MI | Rohit Sharma | மீண்டும் கேப்டனாகும் ஹிட் மேன்? - `MI' சூசகமாக வெளியிட்ட போஸ்டர்.. உங்களுக்கு என்ன தோனுது? மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் ரோஹித் சர்மா நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக வெளியாகியுள்ள தகவல், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு ரோஹித் சர்மாவிடமிருந்து கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டு ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது தலைமையில் மும்பை அணி விளையாடி வந்த நிலையில், தற்போது ஹர்திக் பாண்டியா பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாறியுள்ளார். அவருக்குப் பதிலாக அர்ஷ்தீப் சிங் மும்பை அணிக்கு வந்துள்ளார். இதற்கிடையே சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் தங்களது தனிப்படட்ட இலக்குகள் காரணமாக கேப்டன் பொறுப்பை ஏற்க தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. இதனிடையே, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் வெளியிட்ட சூசக புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால், ஐந்து முறை மும்பை அணிக்கு IPL கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் சர்மா மீண்டும் கேப்டனாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், கேப்டன் நியமனம் குறித்து அணி நிர்வாகம் இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை

TN Rain | School Leave | பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Anbilmahesh Case | அன்பில் வழக்கில் அடுத்து என்ன? - பரபரப்பு தகவல்

Gem Veeramani Case | பிரகாஷை பிடிக்க.. இன்டர்நேஷனல் லெவல் மூவ் - தொடரும் பரபரப்பு

Jem veeramani | Pocso | ஜெம் வீரமணி வழக்கில் புதிய திருப்பம்.இத்தனை சிறுமிகளா? போலீஸின் அதிரடி Move

BREAKING || இந்தியாவுக்கு 25%, சீனாவுக்கு 40% இறக்குமதி வரி - அமெரிக்காவின் டிவிஸ்ட் மூவ்