விளையாட்டு

மருத்துவமனையில் மேத்யூ ஹைடன் : விபரீதமான விளையாட்டு

தனது மகனுடன் அலைச்சறுக்கில் ஈடுபட்ட மாத்தியூ ஹைடன் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
ஆஸ்திரேலியா முன்னாள் பேட்ஸ்மேன் மாத்தியூ ஹைடனுக்கு அலைச்சறுக்கின் போது விபத்து ஏற்பட்டுள்ளது.46 வயதான மாத்தியூ ஹைடன் கடந்த சனிக்கிழமை தன் மகனுடன் குயின்ஸ்லாந்தில் அலைச்சறுக்கில் ஈடுபட்ட போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அவருக்கு கழுத்து மற்றும் முதுகு தண்டில் முறிவுகள் ஏற்பட்டுள்ளது.இதை அவரே தனது வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் " எனது மகன் ஜோஷுடனான விளையாட்டு தோல்வி அடைந்தது.சில காலம் விளையாட்டிற்கு முடிவு .எனக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.இந்நிலையில் ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தி வருகின்றனர்.

Anbilmahesh ``சப்பாத்தியால் உடல் எடை குறைந்துவிட்டது’’ - நீதிபதி முன் அன்பில்... பரபரப்பு கோரிக்கை

Sekarbabu | போலீசிடம் தகராறு? - ஸ்டேஷனில் சேகர்பாபு.. பரபரக்கும் தலைநகர்

CM Vijay | Devar Gurupoojai| தேவர் சிலைக்கு மாலை போட்ட சில நிமிடங்களில்.. CM சொன்ன வார்த்தைகள்

MK Stalin | DMK vs TVK | ``எச்சரிக்கை மணி’’ - மகளிரணியை இறக்கிவிட்ட ஸ்டாலின்

Thevar Jayanthi | பசும்பொன்னில் CPR, ஆளுநர் அர்லேகர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை