விளையாட்டு

"உலக சாம்பியன் பட்டம் வென்ற மாற்றுத்திறனாளி வீராங்கனை : சோதனைகளை கடந்து சாதனை புரிந்த ஜெர்லின்"

சாதனை படைக்க உடல் குறைபாடு எந்த விதத்திலும் தடையில்லை என்பதை மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா நிரூபித்திருக்கிறார்.

தந்தி டிவி

15 வயதே ஆன ஜெர்லின், தைவானில் அண்மையில் நடைபெற்ற இரண்டாவது உலக காது கேளாதோர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் , ஜூனியர் பிரிவு ஒற்றையரில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

27 நாடுகள் கலந்து கொண்ட இந்த தொடரில் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கமும், கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கமும், சீனியர் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் என மொத்தம் 4 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளார். இந்த தொடரில் இந்தியா சார்பாக பங்கேற்ற 16 வீரர்களில் ஜெர்லின் அனிகா மட்டுமே தங்கம் வென்றவர் என்பதும் ,,

உலக ஜுனியர் பிரிவு தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருந்த அவர் தற்போது முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்