ஜார்கண்டில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் முதல் பாதியில் ஜாம்ஷெட்பூர் வீரர் 28 ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார் இரண்டாம் பாதியிலும் ஜாம்ஷெட்பூரின் ஆதிக்கம் தொடர கவுகாத்தி வீரர்கள் திணறினர். இறுதியாக 90வது நிமிடத்தில் கவுகாத்தி வீரர் டிரியாடிஸ் கோல் அடித்ததால் அந்த அணி தோல்வில் இருந்து தப்பியது. ஆட்டம் சமனில் முடிந்ததால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.