விளையாட்டு

6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை தோற்கடித்து சென்னை அபார வெற்றி

தந்தி டிவி

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பெங்களூருவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை, தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் டூபிளஸ்ஸி பேட்டிங் தேர்வு செய்தார். அதிரடி தொடக்கம் தந்த டூபிளஸ்ஸி 35 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரஜத் பட்டிதாரும் மேக்ஸ்வெல்லும் டக் அவுட்டாகி பெங்களூரு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். நிதானமாக விளையாடிய கோலி 21 ரன்களுக்கும் கேமரான் க்ரீன் 18 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பெங்களூரு அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது தினேஷ் கார்த்திக் - அனுஜ் ராவத் ஜோடி பொறுப்பாக ஆடியது. துஷார் தேஷ்பாண்டே வீசிய 18வது ஓவரில் இருவரும் சேர்ந்து 25 ரன்கள் அடிக்க பெங்களூருவின் ரன் உயர்ந்தது. 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக அனுஜ் ராவத் 48 ரன்கள் அடித்தார். மிரட்டலாக பந்து வீசிய சென்னை பவுலர் முஷ்தபிஸூர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்