ஐபிஎல் - சென்னை vs மும்பை
ஐபிஎல் 41 வது லீக் ஆட்டத்தில் சென்னை அணி மும்பையுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. சார்ஜா மைதானத்தில் நடக்கும் இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் மும்பை அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும். சென்னை அணி வெற்றி பெறும் பட்சத்தில் சென்னை எப்படியாவது play off க்கு சென்றுவிடும் என நம்பும் ரசிகர்களுக்கு ஆறுதலாய் அமையும்.