விளையாட்டு

ஐ.பி.எல். 12வது சீசனுக்கான ஏலம் : எந்த அணி யார் யாரை குறி வைக்கும் ?

ஐ.பி.எல். 12வது சீசனுக்கான ஏலத்தில் எந்த அணி வீரர்கள் யார் யாரை குறி வைக்கும் என்பதை தற்போது காணலாம்..

தந்தி டிவி

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 கோடியே 40 லட்சம் ரூபாய் கையிருப்பில் உள்ளது. சென்னை அணி 2 இந்திய வீரர்கள் மட்டுமே எடுக்க முடியும். இதனால் சூழற்பந்துவீச்சாளர் அக்சர் பட்டேல், வேகப்பந்துவீச்சாளர் உனாட்கட் ஆகியோரை சென்னை அணி குறி வைக்கும்.

மூன்று முறை சாம்பியனான மும்பை அணி கையிருப்பில் 11 கோடியே 15 லட்சம் ரூபாய் உள்ளது. மும்பை அணி 6 உள்ளூர் வீரர்களையும், ஒரு வெளிநாட்டு வீரர்களையும் வாங்க முடியும்.

இந்த தொகையை வைத்து யுவராஜ் சிங், மெக்குல்லம், பாரிஸ்டோ உள்ளிட்ட வீரர்களை குறி வைக்கும்.

பெங்களூரு அணி கையிருப்பில் 18 கோடியே 15 லட்சம் ரூபாய் உள்ளது. இதனை வைத்து அந்த அணி 11 இந்திய வீரர்களையும், 4 வெளிநாட்டு வீரர்களையும் பெங்களூரு அணி ஏலத்தில் எடுக்க முடியும்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி சிம்ரன் ஹெட்மர், தென்னாப்பிரிக்க வீரர் மார்க்கரம், மனோஜ் திவாரி,யுவராஜ் சிங் ஆகியோரை ஏலத்தில் எடுத்தால், அது அந்த அணிக்கு நல்லது.

ஐதராபாத் அணிக்கு கையிருப்பு 9 கோடியே 70 லட்சம் ரூபாய் உள்ளது. அவர்களால் 3 இந்திய வீரர்கள் , 2 வெளிநாட்டு வீரர்களை வாங்க முடியும்.

நியூசிலாந்து வீரர் குப்தில், கோரி ஆண்டர்சன் ஆகியோரை அந்த அணி குறிவைக்கும்.

டெல்லி அணி கையிருப்பில் 25 கோடியே 50 லட்சம் ரூபாய் உள்ளது. அதனை வைத்து 7 இந்திய வீரர்கள் 3 வெளிநாட்டு வீரர்களை அவர்களால் ஏலத்தில் எடுக்க முடியும்.

மெக்குல்லம், அலெக்ஸ் ஹெல்ஸ், இஷாந்த் சர்மா ஆகியோரை டெல்லி அணி ஏலத்தில் எடுக்க முயற்சி செய்யலாம்.

இந்த ஏலத்தில் கலக்கப்போவது பஞ்சாப் அணி தான், அவர்கள் கையிருப்பில் 36 கோடியே 20 லட்சம் ரூபாய் உள்ளது. இதை வைத்து 11 இந்திய வீரர்கள் 4 வெளிநாட்டு வீரர்களை அவர்களால் எடுக்க முடியும்.

மேத்தீயூஸ், டிவைன் ஸ்மித் டார்சி ஷார்ட் உள்ளிட்ட வீரர்களை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுக்கலாம்.

கொல்கத்தா அணி கையிருப்பில் 15 கோடியே 20 லட்சம் ரூபாய் உள்ளது. இதனை வைத்து அவர்கள் 7 இந்திய வீரர்களையும், 5 வெளிநாட்டு வீரர்களையும் வாங்க முடியும்.

ராஜஸ்தான் அணி கையிருப்பில் 20 கோடியே 95 லட்சம் ரூபாய் உள்ளது. இதனை வைத்து 6 இந்திய வீரர்கள், 3 வெளிநாட்டு வீரர்களை வாங்க முடியும்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி