முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததால் , ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். ராஜ்கோட் மைதானம் எளிதாக பேட்டிங் செய்ய உகந்ததாகும். இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய இந்திய வீரர்கள் வலைபயிற்சியில் ஈடுபட்டனர். காயம் காரணமாக ரிஷப் பந்த் விலகியுள்ளதால் , விக்கெட் கீப்பர் பணியை கே.எல்.ராகுல் மேற்கொள்ள உள்ளார். இந்திய அணியில் ஷர்துல்
தாக்கூருக்கு பதிலாக நவ்தீப் சைனிக்கு வாய்ப்பளிக்கபடலாம் என்று கூறப்படுகிறது.