விளையாட்டு

முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா முன்னிலை - சுருண்ட ஆஸ்திரேலிய அணி

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி சுருண்டது.

தந்தி டிவி
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 74 ரன்கள் குவித்திருந்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள், இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அத்துடன் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். தற்போது இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க வீரர் பிருத்வி ஷா 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி