விளையாட்டு

உலக கோப்பை ஹாக்கி போட்டி : நெதர்லாந்திடம் போராடி வீழ்ந்தது, இந்தியா

உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் காலிறுதி சுற்றில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

தந்தி டிவி
உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் காலிறுதி சுற்றில் இந்திய அணி தோல்வியை தழுவியது. புவனேஸ்வர் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நெதர்லாந்துடன் இந்தியா மோதியது.ஆட்டதின் 12 -வது நிமிடத்தில் இந்திய வீரர் ஆகாஸ்தீப் முதல் கோல் அடிக்க, 15- வது நிமிடத்திலே பதில் கோல் அடித்து நெதர்லாந்து அணி சமன் செய்தது.ஆட்டத்தின் 50- வது நிமடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை நெதர்லாந்து கோலாக மாற்றி முன்னிலை பெற்றது.ஆனால் இந்திய அணி 54- வது நிமிடத்தில் கிடைத்த அழகான வாய்ப்பை வீணடித்தது. இதன் மூலம் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அரையிறுதிக்கு முன்னேறியது. 43 ஆண்டுக்கு பிறகு அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இந்திய அணி வீணடித்தது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு